ஜோதி அறக்கட்டளை 2020ம் ஆண்டு தஞ்சாவூரில் ஆரம்பிக்கப்பட்டது . வறுமை கோட்டிற்கு கீழே உள்ள எல்லா சமூகத்தை சார்ந்த பெண் குழந்தைகளுக்கும் கல்வி , சுகாதாரம் , சத்தான உணவு மற்றும் குடும்ப பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய எண்ணத்துடன் ஜோதி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது . மேலும் தமிழகம் முழுவதும் நலிவடைந்தவர்களுக்கு அவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் உதவிகளை ஜோதி அறக்கட்டளை வழங்கி வருகிறது . அரசு இயந்திரங்களுக்கு பக்கபலமாக அரசின் சமூக விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறது .